Monday, July 20, 2009

வாழ்க்கை

ஒரு பூங்கா, மனித சப்த்தங்கள் குறைந்து, இயற்க்கையின் வனப்புகள் நிறைந்து கிடக்கிறது. ஒரு அழகான பெரிய மரம். அதற்க்கு அடியில் அமர்ந்திருக்கிறான் ஒருவன்....அந்த மரத்தில் வெள்ளை நிறப் பூக்கள் பூத்துக்குலுங்குகிறது. அந்த மரம் காற்றின் தாளத்திற்க்கு ஆடும்போது அந்த பூக்கள் அவன் மீதும் சிதறுகிறது. அதை அவன் பொருட்படுத்தாது, அவன் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டான். அவன் காலத்தைவிட வேகமாக பயனித்துக்கொண்டிருந்தான்.


காற்று பலமானது, பெரிய பெரிய மேக கூட்டங்கள் சந்தித்துக் கொண்டன... சட்சியாக மின்னல்கள்.. சில நிமிடங்களில், மழைத்துளிகள் பூமியய் தொடத்துவங்கின... சில அவன் புத்தகத்தை தொட்டன.... இப்போது அவன் வேகம் குறைந்து அந்த புங்காவிற்கு திரும்பிருந்தான்.... வேகமாக ஓடி அருகில் இருந்த நிழல்குடையில் ஒதுங்கினான்....


மழை கொஞ்ஜம் அதிகமாகி இருந்தது. இப்பேது இவனை பற்றி, வயது 40க்கு அருகில், V.R.S. வாங்கிவிட்டு, வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் வங்கியில் பகுதி நேர கணகாளராக பணியாற்றி வருகிறான். மத்தியத்திற்கு பிறகு இவனுக்கு வேலை இல்லை. அப்போது இவன் இந்த மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிப்பது வழக்கமாக்கி இருந்தான். இவனிடம் யாரவது பேசினால் இவனது பதில்கள், ஒரு வரியை தாண்டியது இல்லை.... இங்கு நடைப்பயிற்ச்சிக்கு வருகிறவர்கள் யாரும் இவன் பேசி பார்த்தது இல்லை... இவன்னுன்டு இவன் வேலை உண்டு என இருப்பான். புத்தகம் தான் இவனது உலகம் என நினைப்பவன்.... இத்தனைக்கும் பல வருடங்களாக இந்த மரத்தின் அடியில் அமர்ந்து படிக்கிறான்... இவனுக்கு இது என்ன மரம் என்றுகூட தெரியாது....


மழை ஓய்கிறது.. அந்த மாலை நேர சூரியன் இன்னும் சில மணி நேரத்தில் மலைகளுக்கு பின் சென்று மறைய போகிறான்.. ஆயினும் அவன் கதிர்கள் பிரியும் மேகக்கூட்டங்கள் வழியே ஊடுருவி நிலத்தை தொட போராடுகிறது. ஆனால் தேங்கி நிற்க்கும் மழை நீரில் பட்டு சிதறுகிறது. மீண்டும் மீண்டும்... சூரியனுக்கு தோல்வியே....

இப்போது அவன் அமர்ந்திருந்த இடத்திற்க்கு வருகிறான்... இந்த சூரியன்‍‍ மேகம் மழைநீர் போராட்டத்தை பார்க்கிறான். வழியில் சிதரிக்கிடக்கும் பூக்களை பார்க்கிறான். அந்த பூவின் மணமும், அழகான சூரிய ஒளியும், இதமான குளிர் காற்றும், அவனை ஒரு பரவச நிலைக்கும், அதற்க்கு மேலும் கொண்டு செல்கிறது. அது அவனுக்கு புத்துயிர் அளிக்கிறது. இதே மரத்தின் அடியில் பல நாட்க்கள் அமர்ந்திருக்கிறான், பல முறை இவன் படிக்கும் போது மழையும் பெய்திருக்கிறது. அனால் இதற்க்கு முன் அவன் இப்படி ஒரு அனுபவத்தை அனுபவித்தது இல்லை. அவன் இப்போது பறந்து கொண்டிருந்தான்.

டங்... டங்... டங்... இறக்கைகள் பிடுங்கபடுகிறது.


பூங்கா காவலாலி கேட்டை தட்டிக்கொன்டே "சார் டைம் ஆச்சு"

ஒரு சின்ன வருத்தத்துடன் வீடு திரும்புகிறான்....
அன்று இரவு கனவில், அந்த இடம், அந்த மழை நீர், அவனுக்கு பிடித்தமானவர்கள், அந்த பூவின் வாசம்... அந்த குளிர் என அனைத்தும் வருகிறது. நாளை கண்டிப்பாக அந்த இடத்திற்க்கு செல்ல வேண்டும் என எண்ணுகிறான்...

அடுத்த நாள், அவனது வேலைகள் அதிகரித்ததால் அந்த பூங்காவிற்க்கு செல்ல முடியவில்லை. அதற்க்கு அடுத்த நாள், வேலைகள் முடிய அந்த பூங்காவிற்கு மிக சந்தோசத்தில் வருகிறான்.

அவன் படிக்கும் இடம் அருகில் வர மனதில் ஒருவிதமான மகிழ்ச்சி பரவுகிறது. அடுத்த சில நிமிடங்களில் ஆது போன இடம் தெரியவில்லை. அந்த மரம் அங்கு இல்லை. மரத்துகள்களும் பூக்களும் உதிர்ந்து கிடக்கிறது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவ்வழியே வரும் காவலாலி அவன் நிற்பதை பார்த்து,

"சார், ரெண்டு நாளைக்கு முன்னாடி நைட்டு நல்ல மழை, மரம் சஞ்சிருச்சு, இப்பதான் வெட்டி சுத்தம் பன்னேன்" என கூறிக்கொண்டே சென்றான்.

இவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அந்த இடத்திலேயே பல மணி நேரம் அமர்ந்திருந்தான். மீண்டும் அந்த காவலாலி கேட்டை தட்டும் சத்தம் கேட்டு நினைவிற்க்கு வந்தான்.

மீண்டும் மேகங்கள் தங்கள் உறவினர்களை சந்திதுக்கொண்டன... சில துளிகள் மண்ணில் விழ, மண்ணின் மனமும், குப்பை தொட்டியில் கிடந்த அந்த வெட்டப்பட்ட மரத்தின் பூக்களின் வாசமும் இணைந்தது. அவன் அந்த மனத்தை நன்றாக சுவசிக்க துவங்கினான். மனம் இலகி இருந்தது..... இப்போது அவன் வழ்க்கையில் மற்றவர்களைவிட மெதுவாக நடக்க துவங்கியிருந்தான். அவன் கையில் மண்ணின் மணமும், பூவின் வாசமும் இருந்தது, புத்தகத்திற்கு பதிலாக.....

நான் பார்த்த சில மனிதர்களுக்காக.......

விணையுக்கிகள்

ப‌ல செயல்கள் எண்ணங்களாக கற்பனையிலேயே முடிந்த்துவிடும்.... சில செயல்கள் தொடக்கத்திலேயே முடிந்த்துவிடும்.... சில செயல்கள் மெதுவாக நடக்கும்.... வெகு சில செயல்கள் வாழ்க்கையே மாற்றிவிடும்.....

இந்த அனைத்து செயல்களிலுமே விணையுக்கிகள் உண்டு.... அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள், நன்பர்கள், காதல், கனவன், மனைவி, குழ்ந்தை ஏன் வழிப்போக்கர்கள் கூட விணையுக்கிகளாக செயல்படுவார்கள்..... சிலர் அடையாளம் காணப்படுவர்... பலர் மறைந்தோ, மறந்தோ போயிருப்பர்....

எனது இந்த செயலுக்கும் பலர், விணையுக்கிகளாக செயல்பட்டவர்கள், உங்களுக்கு தெரிந்தவர்கள், சுஜாதா, கல்கி, ஜெயகந்தன், பாலகுமாரன், மதன்..... இவர்களது பாதிப்பு எனது எழுத்தின் மீதே தவிர எண்ணத்தின் மீது அல்ல...

எனது மனம் (மூளை), பிம்பங்கள் மற்றும் கற்ப்பனை சக்தி அதிகம் கொண்டது(visual brain). ஒரு சொல் சொன்னால், மனதில் அது தொடர்பான பிம்பங்கள், அதன் தொடர்ச்சி, உணர்வு, மணம் என மொத்தமாக உடனடியாக தோன்றும்...இதன் தாக்கம் எனது பதிவுகளில் இருக்கும். இதில் சுற்றுப்புறம் விணையுக்கியாக செயல்பட்டது.

ஆக இந்த அனைத்து விணையுக்கிகளுக்கும் நன்றி கூறுவதை விட இந்த பதிவில் அவர்களுக்கும் பங்களிக்கிறேன்.....